அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’மாஃபியா’. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, ‘அக்னி சிறகுகள்’, ‘பாக்சர்’, ‘சினம்’ ஆகிய படங்களிலும் நடித்து வந்தார் அருண் விஜய். இந்நிலையில் இந்த படங்களில் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘சினம்’ படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்த தகவலை சற்றுமும் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களுடன் பதிவு செய்துள்ளார். ‘நீதி கொண்டு கொன்ற போதும் … தீரவில்லை கோபம்…’’ என்று பொருள்படும்படியாக ஆக்ஷன் க்ரைம் த்ரில்லர் கதை அமைப்புகொண்ட இப்படத்தை ‘MSPL புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் அருண் விஜய்யுடன் பாலக் லால்வானி கதையின் நாயகியாக நடிக்க, காளிவெங்கட்டும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘யுவன் யுவதி’, ‘ஹரிதாஸ்’, ‘வாகா’ ஆகிய படங்களை தொடர்ந்து ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கும் இப்படத்திற்கு கோபிநாத் இசை ஒளிப்பதிவு செய்துள்ளார். சபீர் இசை அமைத்து வருகிறார்.
#Sinam #ArunVijay #GNRKumaravelan #MovieSlidesPrivateLimited #MusicComposerShabeer #VijayKumar #CinematographerGopinath #SinamShootingWrappedUp
சுந்தர்.சி இயக்கிய ‘முறை மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அருண்...
அருண் விஜய் இப்போது, ’மாஃபியா’, ‘அக்னி சிறகுகள்’, ‘பாக்சர்’, ‘சினம்’, அறிவழகன் இயக்கும்...
‘துருவங்கள் பதினாறு’படப்புகழ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி...