6-வது முறையாக இணையும் சூர்யா, ஹரி!

ஹரி இயக்கத்தில் சூர்யா ஆறாவது முறையாக நடிக்கும் படம்  ‘அருவா’

செய்திகள் 3-Mar-2020 11:46 AM IST Top 10 கருத்துக்கள்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து சூர்யாவின் 39-வதுபடமாக உருவாக இருக்கும் படத்தை ஹரி இயக்குகிறார். ஹரி இயக்கத்தில் ஆறாவது முறையாக சூர்யா நடிக்க இருக்கும் இந்த படத்திற்கு ‘அருவா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சூர்யா நடிப்பில் ‘சில்லுனு ஒரு காதல்’, ‘சிங்கம்’, ‘சிங்கம்-3’ முதலான படங்களை தயாரித்த கே.ஈ.ஞானவேல்ராஜாவின் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரிக்கிறது. ஹரி இயக்கத்தில் உருவாக இருக்கும் 16-வது படமான இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (ஏப்ரல்) துவங்கி ஒரே கட்டமாக நடத்தப்பட்டு, படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். ‘அருவா’ படத்தின் மூலம் சூர்யாவுடனும், ஹரியுடனும் முதன் முதலாக பணிபுரிகிறார் டி.இமான். இந்த படத்தில் சூர்யாவுடன் நடிக்க இருக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் இப்படத்தில் பணிபுரிய இருக்கும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படம் தவிர சூர்யா, வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் ‘வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த பட அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;