முன்றாவது முறையாக இணையும் கூட்டணி!

‘கழுகு[’, ‘கழுகு-2’ ஆகிய படங்களை தொடர்ந்து சத்யசிவாவும், கிருஷ்ணாஅவும் இணையும்  படம் ‘பெல்பாட்டம்’

செய்திகள் 3-Mar-2020 11:35 AM IST Top 10 கருத்துக்கள்

சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா கதையின் நாயகனாக நடித்த படம் ‘கழுகு’. இந்த அடம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘கழுகு-2’ படத்தில் இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்தனர். ம். இந்நிலையில் இவர்கள் இருவரும் மூன்றாவது முறையாக ஒரு படத்தில் மீண்டும் இணைய இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ‘பெல்பாட்டம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதே பெயரில் கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற படத்தின் ரீ-மேக்தான் இந்த ‘பெல்பாட்டம்’. இந்த படம் ஹிந்தியிலும் ரீ-மேக்காகிறது. ஹிந்தி ரீ-மேக்கில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். தமிழில் ரீ-மேக்காகும் ‘பெல்பாட்டம்’ படத்தில் கிருஷ்ணாவுடன் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் காமெடி கேரக்டரில் சரவணன் நடிக்கிறார்.

‘பெல்பாட்டம்’ முந்தைய காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகிறது. இந்த படத்தில் திவாகர் எனும் கதாநாயகனாக நடிக்கும் கிருஷ்ணா, போலீஸாக ஆசைப்பட்டு சூழ்நிலைகள் காரணமாக அது நடக்காமல் போக தனியார் துப்பறிவாளனாக பணிபுரிகிறார். அப்போது குற்றங்களை கண்டு பிடிப்பதில் அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்தான் படத்தின் மையக்கரு. இந்த படத்திற்கு சாம்.சி.எஸ்.இசை அமைக்கிறார். ‘பியார் பிரேமா காதல்’ பட ஒளிப்பதிவாளரான ரஜா சாட்டர்ஜி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்கிறார்.


இந்த படத்தை ‘NH Hari Silver Screens’ எனும் நிறுவனம் சார்பில் H. சார்லஸ் இம்மானுவேல் தயாரிக்கிறார். இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான “தீதும் நன்றும்” விரைவில் திரையரங்கில் வெளியாகவுள்ளது. இயக்குநர் சத்யசிவா தற்போது நடிகர் ராணாவை நாயகனாக வைத்து இயக்கி வரும் ‘1945’ படமும் பெரும் எதிர்பார்ப்பிற்கிடையில் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.#BellBottom #Sathyasiva #NHHariScreens #Kazhugu ##Kazhugu2 #Krishna #AkshayKumar #BellBottomTamilRemake

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;