’மாஸ்டர்’ விஜய்க்கு நன்றி தெரிவித்த லோகேஷ் கனகராஜ்!

லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்தது!

செய்திகள் 3-Mar-2020 11:28 AM IST Top 10 கருத்துக்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ், ஸ்ரீமன் உட்பட பலர் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’. சமீபத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்துள்ளது. திட்டமிட்டபடி ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு வேலைகளை முடித்துக்கொண்டதை முன்னிட்டு படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சியுடன் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளா.

இது குறித்து லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்திருப்பதில், ‘‘129 நாட்கள் இடைவிடாமல் நடந்த ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இந்த பயணம் எனது இதயத்துக்கு நெருக்கமானது. என்னையும் எனது குழுவையும் நம்பியதற்கு நன்றி விஜய் அண்ணா! என்னுடைய குழு இல்லாமல் இப்படியான இமாலய சாதனையை செய்திருக்க முடியாது’’ என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கும் சாந்தனு ட்வீட் செய்திருப்பதில், தனக்கு இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மற்றும் விஜய் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இனி வரும் காலம் வசந்த காலம் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

சேவியர் பிரிட்டோவின் XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் இரண்டு லுக்குகள் சமீபத்தில் வெளியாகி வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசை அமைத்து வரும் இந்த படத்தின் ஒளிப்பதிவை சத்யன் சூரியன் கவனித்திருக்க, ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்து வருகிறார். மாஸ்டர் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;