‘கைதி’யாகும் அஜய்தேவ்கன்!

‘கைதி’ ஹிந்தி ரீ-மேக்கில் கைதியாகிறார் அஜய்தேவ்கன்!

செய்திகள் 29-Feb-2020 12:42 PM IST Top 10 கருத்துக்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனமும் ‘விவேகானந்தா பிக்சர்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்து வெற்றிப் படமாக அமைந்த படம் ‘கைதி’. இந்த படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருக்கிறது. அத்துடன் கைதி படத்தை ஹிந்தியில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனமும் ரிலையன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருக்கிறது என்ற அதிகார்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தின் மூலம் பாலிவுட்டிலும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் கால்பதிக்கிறது என்றும் இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் பதிவு செய்திருந்தோம். அதன்படி இப்போது இந்த படத்தில் தமிழில் கார்த்தி நடித்த கேரக்டரில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜய்தேவ்கன் நடிக்கிறார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அஜய்தேவ்கன் கை கோர்த்திருப்பது பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகம் தமிழில் உருவாக இருக்கும் நிலையில் அஜய்தேவ்கன் நடிப்பில் ‘கைதி’ ஹிந்தியில் ரீ-மேக் ஆகிறது என்று வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை தரும் செய்தியாகும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;