ஹரீஷ் கல்யாண் நடிக்கும் படத்தின் அதிகாரரபூர்வ தகவல்!

ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

செய்திகள் 27-Feb-2020 12:49 PM IST Top 10 கருத்துக்கள்

‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம் என்று இரண்டு படங்களில் நடிக்கிறார். இதில் ‘தாராள பிரபு’ ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற ‘விக்கி டோனர்’ படத்தின் ரீ-மேக்காகும். அதைப்போல தெலுங்கில் விஜய்தேவரகொண்டா, ரீது வர்மா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘பெல்லி சூப்புலு’ படத்தின் ரீ-மேக் தான் ஹரீஷ் கல்யாண் நடிக்கும் இரண்டாவது படம். இந்த படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கார்த்திக் சுந்தர் இயக்குகிறார். கடந்த சில மாதங்களாக நடந்து வந்த இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொனேரு சத்யநாராயணாவின் ‘A Studios LLP’ என்ற நிறுவனமும் ‘ A Havish Pictures’ என்ற நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் ஹரீஷ் கல்யாணுடன் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசை அமைத்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தனுசு ராசி நேயர்களே - டீஸர்


;