கௌதம் சார்தான் ஹீரோ! - துல்கர் சல்மான்

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் குறித்து துல்கர் சல்மான்…

செய்திகள் 27-Feb-2020 12:47 PM IST Top 10 கருத்துக்கள்

‘வாயை மூடி பேசவும்’, ‘ஒகே கண்மணி’, ‘சோலோ’ ஆகிய படங்களுக்கு பிறகு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாக இருக்கும் நேரடி தமிழ் படமான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ நாளை மறுநாள் (28-2-2020) ரிலீசாகிறது. இதனை முன்னிட்டு இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது படம் குறித்து துல்கர் சல்மான் பேசும்போது,

‘‘இந்தப் படத்தின் விளம்பர வேலைகள் ஆரம்பித்தபோது எல்லோரும் என்னிடம் ஏன் இந்த இடைவெளி’ என்று கேட்டது எனக்கு சந்தோஷமாக இருந்தது. காரணம் என்னை மறக்காமல் இருக்கிறார்களே என்பதுதான். இந்த படத்தின் கதையை கேட்டதும் நடிக்க உற்சாகமாக இருந்தேன். ஆனால் அப்போது நான் வேறு படங்களில் கமிட் ஆகியிருந்ததால் இந்த படத்திற்கு கால்ஷீட் கொடுக்க இரண்டு வருடங்கள் ஆனது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி எனக்காக காத்திருந்து இப்போது படத்தை ரிலீஸ் வரைக்கும் கொண்டு வந்துள்ளார். அவருக்கு என்னோட பெரிய நன்றி! இந்த படத்தை பொறுத்தவரையில் கௌதம் வாசுதேவ் மேனன் சார் தான் மிகப்பெரிய பலம். அவர் இல்லாவிட்டால் இந்தப் படம் காமெடியாக இருந்திருக்கும். இந்தப் படத்தின் ஹீரோ அவர் தான்! நான் அவரோட பெரிய விசிறி! படப்பிடிப்பில் அவரோட ஒரு ரசிகராக நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். அவருடன் கண்டிப்பாக ஒரு காதல் படம் நடிப்பேன். இயக்குநர் தேசிங்கு பயங்கர தெளிவானவர். அவரது கனவு இந்தப் படம். இந்த படம் எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்’’ என்றார்.

‘Anto Joseph Film company’, ‘வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் ரிது வர்மா கதாநாயகியாக நடிக்க, தர்ஷன், நிரஞ்சனி அகத்தியன் ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் ஒளிப்பதிவை கே.எம்.பாஸ்கரன் கவனிக்க, படத்தொகுப்பை ஆண்டனி கவனித்துள்ளார். இப்படத்திற்கு ‘மசாலா காஃபி’ என்ற இசை குழுவினர் இசை அமைத்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ட்ரைலர்


;