90 சதவிகித படப்பிடிப்பை முடித்த ‘கர்ணன்’

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘கர்ணன்’ படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நிறைவு!

செய்திகள் 25-Feb-2020 1:25 PM IST Top 10 கருத்துக்கள்

‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘கர்ணன்’. கலைப்புலி எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திருநெல்வேலியில் துவங்கி தொடர்ந்து நடந்து வந்தது. ஒரு சில நாட்களில் இப்படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பை முடித்து விட்ட படக்குழுவினர் சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பை நடத்தி வந்தார்கள். இந்நிலையில் ‘கர்ணன்’ படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பும் நிறைவடைந்துள்ளது. இந்த தகவலை தனுஷ் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில், ‘கர்ணன்’ படத்தின் 90 சதவிகித பட்ப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்தது என்ற தகவலையும் பகிர்ந்துள்ளார் தனுஷ்! தனுஷ் வெளியிட்டுள்ள இந்த தகவல்கள் தனுஷ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்பது நிச்சயம். இந்த படத்தில் தனுஷுடன் ரஜீஷா விஜயன், லால், யோகி பாபு, லட்சுமி பிரியா, கௌரி கிஷன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஒளிப்பதிவை நடராஜன் செய்து வர, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;