அருள்நிதியை இயக்கும் ‘எருமசாணி’ புகழ் விஜய்குமார் ராஜேந்திரன்!

‘எருமசாணி’ புகழ் விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் அருள் நிதி நடிக்கும் படம்

செய்திகள் 25-Feb-2020 1:11 PM IST Top 10 கருத்துக்கள்

‘K-13’ படத்தை தொடர்ந்து அருள்நிதி, ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தின் 90-வது படமாக உருவாகி வரும் ‘களத்தில் சந்திபோம்’ மற்றும் சினுராமசாமி இயக்கத்தில் ஒரு படம் என்று நடித்து வருகிறார். இந்நிலையில் அருள் நிதி அடுத்து நடிக்க இருக்கும் ஒரு படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை யூ-ட்யூப் சேனல் ‘எருமசாணி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான விஜய் குமார் ராஜேந்திரன் இயக்குகிறாராம். அருள் நிதி எப்போதும் மாறுபட்ட கதைகளை, கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருபவர். அந்த வரிசையில் விஜய்குமார் ராஜேந்திரன் சொன்ன ஒரு கதை அருள்நிதிக்கு மிகவும் பிடித்துபோக, அந்த கதையில் நடிக்க அருள் நிதி உடனே சம்மதம் தெரிவித்தாராம். காலேஜ் பின்னணியில் நடந்த ஒரு நிஜ சம்பவத்தை கருவாக கொண்ட இப்படத்தில் அருள்நிதியுடன் இயக்குனர் விஜய் குமார் ராஜேந்திரனும் நடிக்கிறாராம்.

இந்த இந்த படத்தை அருள்நிதி ந்டிப்பில் வெளியான டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள் முதலான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அரவிந்த் சிங் தயாரிக்கிறார் என்றும். இந்த படத்தில அருள்நிதியுடன் நடிக்க இருக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் மற்றும் பணிபுரிய இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாக இருக்கிறது என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது.

#Arulnithi #ErumaSaani #VijayKumarRajendran #KalathilSanthippom #SeenuRamasamy #SuperGoodFilms #AravinndSingh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கே 13 டீஸர்


;