‘அண்ணாத்த’யானார் ரஜினி!

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘ரஜினி-168’  படத்திற்கு ‘அண்ணாத்த’ என்று பெயரிடப்பட்டுள்ளது

செய்திகள் 25-Feb-2020 1:00 PM IST Top 10 கருத்துக்கள்

ரஜினி நடிப்பில் எந்திரன், பேட்ட ஆகிய படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் ரஜினி நடிப்பில் ஒரு படத்தை தயாரிக்கிறது என்றும் ரஜினியின் 168-வது படமான இப்படத்தை சிவா இயக்குகிறார் என்றும் தகவலை ஏற்கெனவே பதிவு செய்திருந்தோம். பெயரிடப்படாமல் படப்பிடிப்பு நடந்து வந்த இப்படத்திற்கு இப்போது ‘அண்ணாத்த’ என்று பெயரிடப்பட்டு அதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தில் ரஜினியுடன் மீனா, குஷ்பு, நயன்தாரா பிரகாஷ்ராஜ், கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். இயக்குனர் சிவாவும் ரஜினிகாந்தும் முதன் முதலாக இணைந்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். கலை இயக்கத்தை மிலன் கவனித்து வருகிறார். பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படம் சிவா இயக்கிய ‘விஸ்வாசம்’ படத்தை போல கிராமம், சிட்டி என்று இரண்டு பின்னணியில் உருவாகி வருகிறது என்று கூறப்படுகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாஃபியா - டீஸர்


;