விக்ரம் பிரபுவின் அடுத்த பட ரிலீஸ் தேதி!

விக்ரம் பிரபு, மகிமா நம்பியார் இணைந்து நடிக்கும் அசுரகுரு மார்ச் 13-ஆம் தேதி ரிலீஸாகிறது!

செய்திகள் 25-Feb-2020 12:49 PM IST Top 10 கருத்துக்கள்

இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராகவும், ‘அஞ்சனவித்தை’ என்ற குறும் படத்தை இயக்கி, தமிழக அரசின் விருது பெற்றவருமான ராஜ்தீப் இயக்கியுள்ள படம் ‘அசுரகுரு’. விக்ரம் பிரபு, மகிமா நம்பியார் இணைந்து நடிக்கும் இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் இப்படத்தை ரிலீஸ் செய்ய தேதி குறிக்கப்பட்டது. ஆனால் அந்த தேதியில் இப்படம் வெளியாகவில்லை. இப்போது ‘அசுரகுரு’ படத்தை வருகிற மார்ச் 13-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்து அதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

‘J.S.B.Studios’ நிறுவனம் சார்பில் J.S.B.சதீஷ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கணேஷ் ராகவேந்திரா, சைமன் கே.கிங் இருவர் இசை அமைத்துள்ளார். ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். சென்சாரில் U/A சர்டிஃபிக்கெட் கிடைத்துள்ள இந்த படத்தில் விக்ரம் பிரபு, மகிமா நம்பியாருடன் யோகி பாபு ஜெகன், முனீஸ்காந்த் ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ‘வானம் கொட்டட்டும்’ படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாக இருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஐங்கரன் ட்ரைலர்


;