மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வரும் படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கி வரும் இந்த படத்தில் கங்கணா ரணாவத் ஜெயலிதாவாக நடிக்கிறார். அரவிந்த் சாமி எம்.ஜி.ஆராக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். சமீபத்தில் அரவிந்த் சாமி ஏற்று நடிக்கும் எம்.ஜி.ஆர்.கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்நிலியில் ஜெயலலிதாவாக தோன்றும் கங்கணா ரணாவத்தின் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இன்று (ஃபிப்ரவரி -24) ஜெயலலிதாவின் பிறந்த நாள் என்பதால் இப்போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் இளம் வயது ஜெயலலிதாவை பிரதிபலிக்கும் விதமாக கங்கணா ரணாவத் தோற்றமளிக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களை மிகவும் கவரும் என்பது நிச்சயம்.
‘தலைவி’ படத்தை விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர்.சிங் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் திரைக்கதையை ‘பாகுபலி’, ‘மணிகர்னிகா’ படம் உட்பட பல வெற்றிப் படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதிய கே.விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார். ‘தலைவி’ படத்தின் ஒளிப்பதிவு பணியை இதற்கு முன் ஏ.எல்.விஜய் இயக்கிய சில படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த நீரவ்ஷா கவனித்து வருகிறார்.
#Thalaivi #ALVijay #KanganaRanaut #GVPrakashKumar #JayalalithaBiopic #VibriMedia #ALVijay #VishnuVardhanInduri #NirovShah #ArvindSwamyAsMGR #ArvindSwamy #ThalaiviTeaser #ThalaiviSecondLook #Poorna #Madhoo
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு...
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பட்டாஸ்’. இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ்...
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரை போற்று’ படத்தின் புதிய புதிய தகவல்கள் அடிக்கடி...