சூர்யாவின் ‘சூரரைப் போற்று’வை கைபற்றிய பிரபல நிறுவனம்!

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தின் சாட்லைட் உரிமையை சன் டிவி வாங்கியது!

செய்திகள் 22-Feb-2020 1:29 PM IST Top 10 கருத்துக்கள்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் பாடல் ஒன்ற சமீபத்தில் 70 பள்ளி மாணவர்கள, மாணவிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பறந்த நிலையில் வெளியிட்டு, பரபரப்பாக பேச வைத்தனர். இந்நிலையில் கோடை விடுமுறைக்கு ரிலீஸாக இருக்கும் ‘சூரரைப் போற்று’ படத்தின் சாட்லைட் உரிமையை பிரபல சன் டிவி நிறுவனம் வாங்கியுள்ள தகவவலை இப்போது படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ஏற்கெனவே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ள இந்த படத்தை இப்போது சன் டிவி நிறுவனம் கைபற்றியிருப்பதன் மூலம் படத்தின் மீதான ஏதிர்பார்ப்பு மேலும் அதிகமாகி உள்ளது. சூர்யாவுடன் அபர்ணா பாலமுரளி கதையின் நாயகியாக நடிக்க, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, ஊர்வசி, கருணாஸ் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சூர்யாவின் ‘2D ENTERTAINMENT’ நிறுவனமும் ‘Sikhya Entertainment’ என்ற நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாக இருக்கிறது.

#SooraraiPottru #Suriya #Suriya38 #GVPrakashKumar #Aparnabalamurali #SudhaKongara #MohanBabu #MaaraTheme #Veyyonsilli #SooraraiPottruWithSunTV

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;