‘அட்டகத்தி’ தினேஷ் நடிக்கும் ‘தேரும் போரும்’

‘மதயானை கூட்டம்’ படத்தை இயக்கிய விக்ரம் சுகுமார் இயக்கத்தில்  ‘அட்டகத்தி’ தினேஷ் நடிக்கும் படம் ‘தேரும் போரும்’

செய்திகள் 22-Feb-2020 12:32 PM IST Top 10 கருத்துக்கள்

‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘குண்டு’. இந்த படத்தை தொடர்ந்து தினேஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. தினேஷின் அடுத்த படத்தை ‘மதயானைக் கூட்டம்’ படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இயக்குகிறார். இந்த படத்தை நல்லு ‘சாமி பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கிறார். வித்தியாசமாக ‘தேரும் போரும்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ‘உள்குத்து, ‘ஒரு நாள் கூத்து’ ‘மான்ஸ்டர்’ உட்பட பல படங்களுக்கு இசை அமைத்த ஜஸ்டின் பிரபகாரன் இசை அமைக்கிறார். கலை இயக்கத்தை ராஜீவன் கவனிக்கிறார். ‘மைனா’ படப் புகழ் சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் மற்ற அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ட்ரைலர்


;