‘இந்தியன்-2’ படப்பிடிப்பில் நடந்த துயர சம்பவம்!

‘இந்தியன்-2’ படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்து மூன்று பேர் பலியான துயர சம்பவம்!

செய்திகள் 21-Feb-2020 3:26 PM IST Top 10 கருத்துக்கள்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உட்பட பலர் நடிக்கும் படம் ‘இந்தியன்-2’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னை பூந்தமல்லி நாசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி. படப்பிடிப்பு தளத்தில் நடந்து வருகிறது. அங்கு பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை நடந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் துணை நடிகர்கள், நடிகைகள் நடிக்கும் காட்சிகளை படமாக்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று மிக உயரமான கிரேன் ஒன்றை பயன்படுத்தி காட்சிகளை படம் பிடித்து வந்தனர். அப்போது எதிர்பாரதவிதமாக அந்த கிரேன் சரிந்து விழுந்தது! அந்த கிரேன் சரிந்து விழும்போது கீழே நின்று கொண்டிருந்த உதவி இயக்குனர் கிருஷ்ணா மற்றும் படப்பிடிப்பு ஊழியர்கள் மது, சந்திரன் ஆகியோர் அந்த கிரேனுக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அத்துடன் படப்பிடிப்பில் இருந்த சிலருக்கும் காயங்கள் ஏற்பட்டது. உடனே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. காயமடைந்தவர்களை உடனே அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இப்போது அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இறந்த 3 பேர்களில் ஒருவரான உதவி இயக்குனர் கிருஷ்ணா, பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகனாம்!

இந்த துயர சம்பவம் கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த துயரசம்பவம் தொடர்பாக கமல்ஹாசன் பெரும் வேதனையுடன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘‘எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இந்த விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன். எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த துயர சம்பவம் குறித்து ‘இந்தியன்-2’ படத்தை தயாரிக்கும் ‘லைகா’ நிறுவனமும் இரங்கல் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;