‘சுருளி’ இல்லை ‘ஜகமே தந்திரம்’

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு ‘ஜகமே தந்திரம்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது!

செய்திகள் 19-Feb-2020 5:35 PM IST Top 10 கருத்துக்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் உட்பட பலர் நடிக்க, சசிகாந்தின் ‘ஒய்நாட் ஸ்டுடியோஸ்’ தயாரிக்கும் படத்திற்கு ‘சுருளி’ என்று பெயரிடப்பட்டுள்ளது என்ற தகவலை பதிவு செய்திருந்தோம். இந்நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் இம்மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் பதிவு செய்திருந்தார். அதன்படி படத்தின் மோஷன் போஸ்டர் சற்றுமுன் வெளியானது. அட்டகாசமான முறையில் வெளியாகியுள்ள இந்த மோஷன் போஸ்டரில் படத்திற்கு ‘ஜகமே தந்திரம்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி இருப்பதுடன் இப்படம் மே 1-ஆம் தேதி ரிலீஸ் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் படத்திற்கு ‘சுருளி’ என்ற தலைப்பு இல்லை ‘ஜகமே தந்திரம்’ என்பதுதான் படத்தின் டைட்டில் என்பதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட‘ படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படம், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் முதல் திரைப்படம் என்று இப்படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;