25 வருட திரையுலக பயணத்தை கொண்டாடிய அருண் விஜய்!

‘மாஃபியா’ பட நிகழ்ச்சியில் அருண் விஜய் தனது 25 வருட திரைப் பயணத்தை கேக் வெட்டி கொண்டாடினார்!

செய்திகள் 19-Feb-2020 3:21 PM IST Top 10 கருத்துக்கள்

சுந்தர்.சி இயக்கிய ‘முறை மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அருண் விஜய். இந்த படம் 1995-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. அருண் விஜய் சினிமாவில் பயணிக்க துவங்கி இப்போது 25 ஆண்டுகள் ஆகிறது. இந்த 25-ஆவது ஆண்டின் துவக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஃபியா’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. ‘துருவங்கள் பதினாறு’ படப் புகழ் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இந்த படம் வருகிற 21-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. இதனை முன்னிட்டு ‘மாஃபியா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. அப்போது இந்நிகழ்ச்சியில் அருண் விஜய் தான் சினிமாவுக்கு வந்து 25-ஆண்டுகள் ஆனதை தனது ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார். இதனை தொடர்ந்து அருண் விஜய் பேசும்போது, ‘‘ 25 வருடம் சினிமாவில் பத்திரிகையாளர்களின் எழுத்துக்களாலும் ஊக்கத்தினாலும் நான் என்னை செதுக்கினேன். இந்த 25 வருட காலத்தில் எனக்கு நிறைய பேர் உதவி புரிந்துள்ளனர். அவர்களுக்கும் எனது ரசிகர்களுக்கும் என் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய பத்திரிகையாளர்களுக்கும் நான் இத்தருணத்தில் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார் அருண் விஜய்!

இந்நிகழ்ச்சியில் ‘மாஃபியா’ படத்தின் கதாநாயகி பிரியா பவானி சங்கர், இயக்குனர் கார்த்திக் நரேன், நடிகர் பிரசன்னா உட்பட அருண் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.#ArunVijay #Mafia #MafiaChapterOne #MafiaPressMeet #25YearsOfArunVijayInCinema #PriyaBhavaniShankar #Prasanna #KarthickNaren #LycaProductions #MafiaFromFeb21st

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாஃபியா - டீஸர்


;