சிம்புவின் ‘மாநாடு’ துவங்கியது!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்சன் இணைந்து நடிக்கும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

செய்திகள் 19-Feb-2020 12:32 PM IST Top 10 கருத்துக்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்சன் கதாநாயாகியாக நடிக்க, இவர்களுடன் இயக்குனர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேர், எஸ்.ஜே.சூர்யா, மற்றும் பிமேஜி, கருணாகரன், பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா, டானியில் ஆனி பாப், ஒய்.ஜி.மகேந்திரன் என்று ஏராளமான பிரபலங்கள் நடிக்கிறார்கள் என்ற தகவலை ஏற்கெனவே பதிவு செய்திருந்தோம். அத்துடன் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது என்ற தகவலையும் பதிவு செய்திருந்தோம். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்’ தயாரிக்கும் இந்த படத்திற்கு

யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை கே.எல்.பிரவீன் கவனிக்க, கலை இயக்கத்தை சேகர் கவனிக்கிறார். ஆடை வடிவமைபை வாசுகி பாஸ்கர் கவனிக்கிறார். சண்டை காட்சிகளை ஸடண்ட் சில்வா அமைக்கிறார். வெங்கட் பிரபுவும் சிம்புவும் முதன் முதலாக இணைந்துள்ள இப்படத்தின் படபிடிப்பு தொடர்ந்து நடக்க இருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மரண மட்ட padal


;