ஏ.ஆர்.ரஹ்மான் பட டிரைலரை பாராட்டிய அட்லி!

ஏ.ஆர்.ரஹ்மான்  கதை எழுதி, இசை அமைத்து, தயாரிக்கும்  ‘99 சாங்ஸ்’ படத்தின் டிரைலருக்கு இயக்குனர் அட்லி பாராட்டு

செய்திகள் 19-Feb-2020 11:49 AM IST Top 10 கருத்துக்கள்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி ,இசை அமைத்து தயாரித்து வரும் படம் ‘99 சாங்ஸ்’. ஹிந்தி மொழியில் உருவாகி வரும் இந்த படத்தின் திரைக்கதை எழுதி விஸ்வேஸ் கிருஷ்ணமூர்த்தி இயக்கி வருகிறார். இந்த படத்தை ஏ.ஆர்.ரஹ்மானுடன் ஜி.ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலரை ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட, அதற்கு பல பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த டிரைலரை பார்த்து இயக்குனர் அட்லியும் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அட்லி பதிவிட்டுள்ளதில், ‘சூப்பரான டிரைலர் சார், பிடித்திருந்தது… படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்திருந்தார். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மானும் அட்லிக்கு நன்றி தெரிவித்துள்ளார். அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார் என்பதும் இந்த படங்களின் வெற்றிக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் பாடல்களும் ஒரு காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;