‘பூமராங்' படத்தில் இணைந்த இயக்குனர் கண்ணனும் அதர்வாவும் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள் என்றும் இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ’பிரேமம்’, ‘கொடி’ உள்ளிட்ட படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார் என்றும் தகவலை சமீபத்தில் பதிவு செய்திருந்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிற்து. பெயரிடப்படாமல் படப்பிடிப்பு நடந்து வந்த இப்படத்திற்கு ‘தள்ளிப் போகாதே’ என்று டைட்டில் வைக்கப்பட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் அதர்வாவும், அனுபமா பரமேஸ்வரனும் காதலர்களைப் போல நெருக்கமாக இருப்பது மாதிரி, அந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் இடம் பெற்ற சுப்பர் ஹிட் பாடலின் வரியை இந்த படத்திற்கு தலைப்பாக்கியிருக்கிறார்கள்.
’MKRP புரொடக்ஷன்ஸ்’ என்ற நி றுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு கபிலன் வைரமுத்து வசனம் எழுதுகிறார் என்ற தகவலையும் ஏற்கெனவே பதிவு செய்திருந்தோம். இந்த படம் ஒரு முழுநீள காதல் படமாக உருவாகி வருகிறது. இந்த படம் தவிர சந்தானம் நடிக்க ‘பிஸ்கோத்’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார் கண்ணன்.
ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றும் இந்த படத்தை இயக்குனர் கண்ணனின்...
‘பூமராங்' படத்தை தொடர்ந்து இயக்குனர் கண்ணனும், அதர்வும் இரண்டாவது குறையாக இணைந்துள்ள படத்தின்...
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ ஹீரோ’. இந்த படம் தயாரிப்பில் இருந்து வந்த...