‘பொன்னியின் செல்வனி’ல் இணைந்த மற்றொரு பாலிவுட் பிரபலம்!

மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியில் செல்வன் படத்தில் பாலிவுட் பிரபலம் ஷோபிடாவும் நடிக்கிறார்!

செய்திகள் 17-Feb-2020 1:28 PM IST Top 10 கருத்துக்கள்

மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்குள் இப்படத்தின் முதல் பாகத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகலையும் முடிக்க திட்டமிட்டுள்ள மணிரத்னம், இப்படத்திற்காக அடுத்தடுத்து பல நடிகர்களை, நடிகைகளை தேர்வு செய்து நடிக்க வைத்து வருகிறார். இந்நிலையில் இப்போது இப்படத்தில் பிரபல பாலுவுடி நடிகையும், மாடலுமான ஷோபிடாவும் இணைந்துள்ளார். ஹிந்தி படமான ‘ராமன் ராகவ் 2.0’ தெலுங்கு படமான ‘கூடாச்சாரி’ மலையாள படமான ‘மூத்தோன்’ உட்பட சில படங்களில் நடித்துள்ள ஷோபிடா ‘பொன்னியின் செல்வன்’ மூலம் தமிழிலும் அறிமுகமாகிறார்! ஏற்கெனவே இந்த படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சரத்குமார், லால், அஸ்வின் காக்குமனு, கிஷோர், அர்ஜுன் சிதம்பரம் என்று பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்து வரும் நிலையில் இப்போது ஷோபிடாவும் இப்படத்தில் இணைந்துள்ளார்.

இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் இப்படத்தை சுபாஷ்கரனின் ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனமும் மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்க, இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை ஸ்ரீகர் பிரசாத் கவனிக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வருகிறது ‘பொன்னியின் செல்வன்’.

#PonniyinSelvan #Karthi #ManiRatnam #Vikram #JayamRavi #AishwaryaRaiBachcham #AishwaryaLekshmi #Lal #LycaProductions #MadrasTalkies #RaviVarman #SreekarPrasad #ARRahman #Trisha #BejoyNambiar #RiyazKhan #SobhitaDhulipala

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;