மருத்துவ கழிவுகளை கொட்டும் இடமா தமிழ்நாடு?

ஹரி உத்ரா இயக்கத்தில் ஆண்டனி, சிவ நிஷாந்த் ஐரா நடிக்கும் படம் ‘கல்தா’

செய்திகள் 17-Feb-2020 12:43 PM IST Top 10 கருத்துக்கள்

‘தெரு நாய்கள்’, ‘படித்த உடன் கிழித்து போடவும்’ ஆகிய படங்களை இயக்கிய் ஹரி உத்ரா இயக்கியுள்ள படம் ‘கல்தா’. ‘மேற்குதொடர்ச்சி மலை’ படத்தில் நடித்த ஆண்டனி, சிவ நிஷாந்த் ஆகிய இருவர் கதையின் நாயகர்களாக நடிக்க இவர்களுடன் ஐரா, திவ்யா , கஜராஜ், ராஜசிம்மன், கருணாநிதி உட்பட பலர் நடிக்கின்றனனர்.

’தமிழ்நாட்டின் அண்டை மாநிலத்தவர்கள் அந்நாட்டின் மருத்துவ கழிவுகளை, குப்பைகளை தமிழ்நாட்டுக்கு திருட்டுத்தன்மாக கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இதற்கு இங்குள்ள சில அரசியல் பிரமுகர்களும் உடந்தையாக இருக்கிறார்கள். இந்த மருத்துவக் கழிவுகளால் சுதாகார கேடு ஏற்பட்டு மக்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள், நாம் எதனால் இப்படி பாதிக்கப்படுகிறோம் என்பது கூட தெரியாத அந்த மக்கள் என்ன செய்தார்கள் என்பதையும், தமிழ்நாடு என்ன மருத்துவ கழிவுகளை கொட்டும் இடமா? என்ற கேள்வியையும் கேட்கும் படமாக இப்படத்தை எடுத்திருக்கிறோம்’ என்கிறார் இந்த படத்தை இயக்கியிருக்கும் ஹரி உத்ரா!

‘மலர் மூவி மேக்கர்ஸ்’ மற்றும் ‘ஐ கிரியேஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு பி.சிவா ஒளிப்பதிவு செய்துளார். ஜெய் கிரிஷ் இசை அமைத்துள்ளார். முத்துமுனியசாமி படத்தொகுப்பு செய்துள்ளார். இறுதிகட்ட வேலகள் நடந்து வரும் இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.


#HariUthraa #Galtha #Anthony #SivaNishanth #JaiKrish #BVasu #MuthuMuniasamy #MalarMovieMakers #ICreations

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர் 2


;