விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவனும் விஜய்சேதுபதியும் மீண்டும் இணைந்து உருவாக்கும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இந்த படத்தில் விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடிக்க, நயன்தாரா, சமந்தா ஆகியோர் இரண்டு கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக இப்படம் குறித்து பேசப்பட்டு வந்த நிலையில் இப்போது இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை விக்னேஷ் சிவனின் சொந்த நிறுவனமான ‘ரௌடி பிக்சர்ஸ்’ நிறுவனமும், செவன் ஸ்க்ரீன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்திற்கு விக்னேஷ் சிவனின் நெருங்கிய நண்பரும், விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரௌடி தான்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்தவருமான அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்க இருக்கிறது.
#VigneshShivan #Nayanthara #LadySuperstar #VijaySethupathi #MakkalSelvan #KaathuvaakulaRenduKaadhal #KRK #Samantha #LalitKumar #SevenScreenStudio #RowdyPictures #AnirudhRavichander
ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி வந்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் அனைத்து...
அசோக் செல்வன், ரித்விகா சிங் இணைந்து நடிக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம்...
‘தர்பார்’ படத்தை தொடர்ந்து ரஜினி ‘சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக...