பிரபுதேவா, அமைரா தஸ்தர் இணையும் ‘பஹிரா’

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா, அமைரா தஸ்தர் இணைந்து நடிக்கும் படம்  ‘பஹிரா’

செய்திகள் 17-Feb-2020 11:44 AM IST Top 10 கருத்துக்கள்

ஆதிக் ரவிச்சந்திரனும், பிரபு தேவாவும் ஒரு படத்தில் இணைகிறார்கள் என்றும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது என்ற செய்தி சமீபத்தில் வெளியாகியிருந்தது. அதன்படி இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்க, அமைரா தஸ்தர் கதையின் நாயகியாக நடிக்கிறார். ‘பஹிரா’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகிறது. ‘ தி ஜங்கிள் புக்’ காமிக் கதையில் வரும் ஹீரோ மோக்ளியை காப்பாற்றும் கருஞ்சிறுத்தையின் பெயர் பஹிரா. இந்த படத்தில் பிரபு தேவாவின் கேரக்டர் இது போன்ற குணம் படைத்தது என்பதால் இப்படத்திறகு வித்தியாமாக ‘பஹிரா’ என்று டைட்டில் வைத்துள்ளார்களாம்! இந்த படத்திற்கு அபிநந்தன் ராமானூஜம் ஒளிப்பதிவு செய்கிறார். கணேசன் சேகர் இசை அமைக்கிறார். ஆர்.பி.பரதன், ரவிசங்கர் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;