வரலட்சுமி சரத்குமார், இனியா இணையும் ‘கலர்ஸ்’

மலையாள இயக்குனர் நிஜார் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார், இனியா இணைந்து நடிக்கும் படம் ‘கலர்ஸ்’

செய்திகள் 10-Feb-2020 1:42 PM IST Top 10 கருத்துக்கள்

நடிகர்கள் ஜெயராம், தீலீப், சுரேஷ் கோபி, குஷ்பு, தேவயானி உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகளை வைத்து 25 மலையாள படங்களை இயக்கியுள்ளவர் நிஜார். மலையாள சினிமாவில் பிரபல இயக்குனராக விளங்கி வரும் இவர் முதன் முதலாக ஒரு தமிழ் படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு ‘கலர்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அறிமுகம் ராம்குமார் கதாநாயகனாக அறிமுகமாக, இவருடன் வரலட்சுமி சரத்குமார், இனியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் மொட்டை ராஜேந்திரனும் நடிக்கும் இந்த படத்தை ‘லைம் லைட் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கெனவே சில வெளிநாட்டு மொழி படங்களை தயாரித்த இந்நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கும் முதல் படமாகும் ‘கலர்ஸ்’. இந்த படத்திற்கு தமிழ், மலையாள, ஹிந்தி படங்களுக்கு இசை அமைத்த எஸ்.பி.வெங்கடேஷ் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவை சஜன் களத்தில் கவனிக்கிறார். விஷால் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்தது. இதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

#VaralaxmiSarathKumar #Iniya #Colors #Nissar #LimeLightPictures #MottaRajendran #SPVenkatesh #SajanKalathil #VSVishal

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எச்சரிக்கை - டிரைலர்


;