’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு அப்டேட் தந்த நடிகர்!

மணிரத்னம் இயக்கும்  ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படபிடிப்பு இப்போது ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது!

செய்திகள் 10-Feb-2020 12:17 PM IST Top 10 கருத்துக்கள்

மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்புசமீபத்தில் தாய்லாந்த் - பாங்காங்கில் துவங்கி சில நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடந்தது. இதனை தொடர்ந்து இப்படத்தின் சில காட்சிகளின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியிலும் நடந்தது. பாண்டிச்சேரியை தொடர்ந்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு இப்போது ஹைதராபாத்திலுள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. நமக்கு கிடைத்த இந்த தகவலை உறுதிப்பட்டுத்தும் விதமாக இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கும் ரியாஸ் கானும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது என்ற தகவலை தனது இன்ஸ்டாம் கிராம் பக்கத்தில் தனது புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.

சுபாஷ்கரனின் ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனமும் மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனமும் இணைந்து மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ‘ஜெயம்’ ரவி, விக்ரம் பிரபு, ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சரத்குமார், ஜெயராம், பிரபு, அஸ்வின் காக்குமனு, கிஷோர் உட்பட பலர் நடிக்க இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து வருகிரார். ஒளிப்பதிவை ரவிவர்மன் செய்து வருகிறார். படத்தொகுப்பை ஸ்ரீகர் பிரசாத் கவனிக்கிறார். தயாரிப்பு உருவாக்கத்தை தோட்டாதரணியும், வாசிக் கானும் இணைந்து கவனிக்கிறார்கள். சண்டை பயிற்சியை ஷாம் கௌஷல் அளிக்கிறார். ஆடை வடிவமைப்பை ஏகா லக்கானி கவனிக்கிறார். நடனங்களை பிருந்தா அமைக்கிறார். ’பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது!

#PonniyinSelvan #Karthi #ManiRatnam #Vikram #JayamRavi #AishwaryaRaiBachcham #AishwaryaLekshmi #Lal #LycaProductions #MadrasTalkies #RaviVarman #SreekarPrasad #ARRahman #Trisha #BejoyNambiar #RiyazKhan #PonniyinSelvanShootingInRamojiFilmCityHyderabad

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;