மணிரத்னம் தயாரிப்பில், விக்ரம் பிரபு நடித்து நேற்று வெளியான படம் ‘வானம் கொட்டட்டும்’. இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ல ‘அசுர குரு’ விரைவில் வெளியாக இருக்கிறது. மணிரத்னம் இயக்கி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் நடித்து வருகிரார் விக்ரம் பிரபு. இந்நிலையில் சுசீந்திரன் சொன்ன ஒரு குடும்ப கதை விக்ரம் பிரபுவுக்கு பிடித்துபோக, அந்த கதையில் நடிக்க விக்ரம் பிரபு சம்மதம் தெரிவித்துள்ளார் என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது. இந்த படத்தின் அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று ஏதிர்பார்க்கப்படுகிறது. சுசீந்திரன் இப்போது இயக்கி வரும் படம் ‘ஏஞ்சலீனா’. இறுதிகட்ட வேலகள் நடந்து வரும் இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#VaanamKottattum #VikramPrabhu #Susienthiran #PonniyinSelvan #Angelina
இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராகவும், ‘அஞ்சனவித்தை’ என்ற குறும் படத்தை இயக்கி, தமிழக அரசின்...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்புசமீபத்தில் தாய்லாந்த் -...