நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மனி’ல் ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ ஜோடி!

நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் நிறைவடைந்தது!

செய்திகள் 8-Feb-2020 1:06 PM IST Top 10 கருத்துக்கள்

ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி வந்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் நிறைவடைந்தது. இந்த தகவலை ஆர்.ஜே.பாலாதி பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்க, ஆர்.ஜே.பாலாஜியும் ஒரு கேரக்டரில் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படத்தில் இணைந்து நடித்த ஜோடியான கௌதம் கார்த்திக், யாஷிகா ஆனந்தும் நடித்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் படபிடிப்பு சமீபத்தில் கன்னியாகுமாரியில் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் திட்டமிட்டபடி படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளையும் முடித்துள்ள படக்குழுவினர் இப்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் பிசியாக இயங்கி வருகின்றனர். ‘மூக்குத்தி அம்மன்’ சம்மர் ரிலீசாக திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;