‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ ஆகிய படங்களின் மிகப் பெரிய வெற்றியை தொடர்ந்து ராஜமௌலி இயக்கி வரும் படம் ‘RRR’. இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட், அஜய்தேவ்கன், சமுத்திரக்கனி, ஹாலிவுட் நடிகை எட்கர் ஜோன் உள்ளிட்டபிரபலங்கள் நடிக்கின்றனர். ஒரு விபத்தின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் 8-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜமௌலி இயக்கும் படம் இதுவென்பதால் இப்படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தரும் என்பது நிச்சயம்.
#RRR #Rajamouli #CharanTeja #JrNTR #Samuthirakani #AliaBhatt #AjayDevgn #DaisyEdgarJones #RRRReleaseOn Jan82021
அறிமுக இயக்குனர் அன்பரசன் இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் படம் ‘வால்டர்’. அதிரடி ஆக்ஷன் த்ரில்லர்...
தமிழ் சினிமாவில் அவ்வப்போது பெண் இயக்குனர்களின் படங்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும், பெரிய அளவில்...
இரண்டாம் பாக வரிசையில் உருவாகியுள்ள மற்றொரு படம் ‘நாடோடிகள்-2’. முதல் பாக ‘நாடோடிகள்’ படத்தை இயக்கிய...