சிம்புவின் ‘மாநாடு’வில் இணைந்த மேலும் 4 பிரபலங்கள்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும்  ‘மாநாடு’ படத்தில் மனோஜ் பாரதிராஜா, டானியல் ஆனி பாப், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் நடிக்கிறார்கள்!

செய்திகள் 4-Feb-2020 12:45 PM IST Top 10 கருத்துக்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தில் கல்யாணி பிரியதர்சன், இயக்குனர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேர், பிமேஜி, கருணாகரன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள் என்ற தகவலை சமீபத்தில் பதிவு செய்திருந்தோம். இப்போது இந்த படத்தில் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா, டானியில் ஆனி பாப், எஸ்.ஜே.சூர்யா மற்றும் ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோரும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நேற்று (ஃபிப்ரவரி-3) நடந்த சிம்புவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ‘மாநாடு’ படக்குழுவினர் பெரும்பாலானோரும் கலந்துகொண்டு சிம்புவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நிலையில் இப்போது, ‘மாநாடு’வில் மேலும் 4 பிரபலங்கள் இணைந்துள்ள தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்த படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை கே.எல்.பிரவீன் கவனிக்க, கலை இயக்கத்தை சேகர் கவனிக்கிறார். ஆடை வடிவமைபை வாசுகி பாஸ்கர் கவனிக்கிறார். சண்டை காட்சிகளை ஸடண்ட் சில்வா அமைக்கிறார். ‘மாநாடு’ படத்தின் படபிடிப்பு வேலைகள் விரைவில் துவங்க இருக்கிறதாம்

#Maanaadu #STR #VenkatPrabhu #SureshKamatchi #VHouseProductions #YuvanShankarRaja #KalyaniPriyadarshan #BharathiRaja #SAChandrasekaran #Premgi #Karunakaran #SJSuryah #YGeeMahendra #ManojKBharathi #DanielAnniePop

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மரண மட்ட padal


;