பாண்டிச்சேரியில் ‘பொன்னியின் செல்வன்’

மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின்  செல்வன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது1

செய்திகள் 4-Feb-2020 12:04 PM IST Top 10 கருத்துக்கள்

மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தாய்லாந்தில் துவங்கி நடைபெற்று முடிவடைந்தது. இந்த படப்பிடிப்பில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், விக்ரம் பிரபு, ஜெயராம் உட்பட பலர் கலந்துகொண்டு நடித்தனர் என்று கூறப்படுகிறது. தாய்லாந்தில் நடந்த படப்பிடிப்பை தொடர்ந்து இப்போது ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது. அங்கு மிகப் பிரம்மாண்டமான முறையில் அரண்மனை ஒன்றின் செட் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த செட்டில் இப்போது ‘ஜெயம்’ ரவி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து வருகிறது என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது. இந்த ஆண்டுக்குள் இப்படத்தின் முதல் பாகத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகலையும் முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம். அதனால் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு ஜெட் வேகத்தில் நடந்து வருகிறது.

ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சரத்குமார், லால், அஸ்வின் காக்குமனு, கிஷோர், அர்ஜுன் சிதம்பரம் ஆகியோரும் நடிக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. சுபாஷ்கரனின் ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனமும் மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை ஸ்ரீகர் பிரசாத் கவனிக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வருகிறது ‘பொன்னியின் செல்வன்’.

#PonniyinSelvan #Karthi #ManiRatnam #Vikram #JayamRavi #AishwaryaRaiBachcham #AishwaryaLekshmi #Lal #LycaProductions #MadrasTalkies #RaviVarman #SreekarPrasad #ARRahman #Trisha

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;