‘பிரண்ட்ஷிப்’பில் இணைந்த ‘பிக்பாஸ்’ பிரபலம் லாஸ்லியா!

அர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கும் பிரண்ட்ஷிப் படத்தில் பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா கதாநாயகியாக நடிக்கிறார்!

செய்திகள் 4-Feb-2020 11:52 AM IST Top 10 கருத்துக்கள்

கிரிக்கெட் பிரபலம் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் படம் ‘பிரண்ட்ஷிப்’. ‘அக்னி தேவி’ படத்தை இயக்கிய ஜே.பி.ஆர்., ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் இந்த படத்தின் டைட்டில் லுக் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை ஷேண்டோ ஸ்டுடியோ மற்றும் சினிமா ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, இந்த படத்தில் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக நடிக்க ‘பிக்பாஸ்-3 சீஸன்’ புகழ் லாஸ்லியா ஒப்பந்தமாகியுள்ளார். இலங்கை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீஸன்-3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பெரும் புகழ் கிடைத்தது லாஸ்லியாவிற்கு! இந்தநிகழ்ச்சியை தொடர்ந்து இப்போது திரைபடங்களில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்புக்கள் வந்தவண்ணம் உள்ளன. ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் ‘பிரண்ட்ஷிப்’ படத்தில் கதாநாயகியாஅக் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் லாஸ்லியா ஆரி அர்ஜுனா நடிக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘ நெடுஞ்சாலை’, ’மாயா’ படங்கள் புகழ் ஆரி அர்ஜுனா நடிக்கும் இந்த படத்தை ஆல்பர்ட் ராஜா இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாந்த இந்த படத்தில் இன்னொரு நாயகியாக ஸ்ருஷ்டி டாங்கேயும் நடிக்கிறார்.

#LosliyaInFriendship #Friendship #HarbhajanSingh ##Dikkiloona #JohnPaulRaj #ShamSuriya #JPR #AgniDevi #ShamSurya #SeantoaStudios #Stalin #CinemaasStudio #FirstTimeInCinemaACricketLegendPlaysMainLead #Losliya #BiggBoss3

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;