’ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனத்துடன் ‘விவேகானந்தா பிக்சர்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்து சென்ற ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் ‘கைதி’. கார்த்தி நடித்த இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து இப்படத்தை வேறு மொழிகளில் ரீ-மேக் செய்து தயாரிக்கும் உரிமையை பெறுவதற்கு பல நிறுவனங்களுக்கு இடையில் போட்டிகள் நிலவி வந்தன. இந்நிலையில் ‘கைதி’ படத்தை ஹிந்தியில் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனமும் பிரபல ‘ரிலையன்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்க முடிவு செய்து அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை சற்று முன் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் இப்படத்தில் பணியாற்ற இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கும் நிலையில் ‘கைதி’ ஹிந்தியில் ரீ-மேக் ஆகிறது என்று வெளியாகியுள்ள தகவல் கார்த்தி ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை தரும் செய்தியாகும்!
#Kaithi #Karthi #KaithiInHindi #LokeshKanagaraj #KaithiHindiRemake #DreamWarriorPictures #SRPrabhu #SRPrakashBabu #RelianceEntertainment
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ்,...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனமும் ‘விவேகானந்தா...
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...