‘அயலானா’கும் சிவகார்த்திகேயன்!

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்திற்கு அயலான் என்று பெயரிடப்பட்டுள்ளது!

செய்திகள் 3-Feb-2020 8:04 PM IST Top 10 கருத்துக்கள்

ரெமோ, சீமராஜா ஆகிய படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர்.டி.ராஜாவின் ‘ 24 AM STUDIOS’ நிறுவனம் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது என்றும் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது என்றும் தகவலை சமீபத்தில் பதிவு செய்திருந்தோம். இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலை இன்று மாலை 5 மணிக்கு இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடுகிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. அதன்படி இப்படத்தின் டைட்டில் அனிமேஷன் வீடியோவை சற்றுமுன் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ மூலம் இப்படத்திற்கு ‘அயலான்’ என்று டைட்டில் வைக்கப்படுள்ள தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் இந்த படத்தில் இன்னொரு தயாரிப்பு நிறுவனமும் இணைந்துள்ள தகவலையும் பகிர்ந்துள்ளனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு படம் ‘டாக்டர்’. இந்த படத்தை கோடப்பாடி ராஜேஷின் கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் ‘ 24 AM STUDIOS’ நிறுவனத்துடன் இணைந்து ‘அயலான்’ படத்தையும் தயாரிக்கிறது. ‘நேற்று இன்று நாளை’ படத்தை தொடர்ந்து ஆர்.ரவிகுமார் இயக்கும் ‘அயலான்’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்க, சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து வருகிறார்.

#24AMStudios #RDRaja #SivaKarthikeyan #RakulPreetSingh #Doctor #NetruIndruNaalai #RRavikumar #Doctor #NelsonDhilipKumar #CoCo #KolamaavuKokila #Ayalaan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

Mr லோக்கல் டீஸர்


;