பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான பி.ஜி.முத்தையா ‘காக்டெய்ல்’ என்ற படத்தை தயாரிக்கிறார் என்றும், அறிமுக இயக்குனர் முருகன் இயக்கும் இந்த படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்க, ஆஸ்திரேலியா நட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட ‘காக்டெய்ல்’ என்ற பறவை ஒன்றும் இப்படத்தில் முக்கிய கேரக்டராக இடம் பெறுகிறது என்ற தகவலையும் சமீபத்தில் நமது இணையதளத்தில் பதிவு செய்திருந்தோம். மற்றும் இந்த படத்தில் சாயாஜி ஷிண்டே, மனோபாலா, மைம் கோபி, லொள்ளு சபா சாமி நாதன், ரமேஷ் மிதுன் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் யோகி பாபு முருகன் வேடத்தில் இருப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டரை பார்த்துவிட்டு சில இந்து அமைப்பினர் படத்தில் முருகனை தவறாக சித்தரித்துள்ளதாகவும், இது தங்களது மத உணர்வை புண்ப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து ‘காக்டெய்ல்’ படத்தின் இயக்குனர் முருகன் விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘‘நிச்சயமாக யாரது உணர்வுகளையும் புண்படுத்தும்விதமாக இந்த படத்தின் கதையும் சரி, இந்த போஸ்டரும் சரி உருவாக்கப்படவில்லை. என் பெயரிலேயே முருகனை கொண்டுள்ள நானும் ஒரு முருக பக்தன் தான்! யோகி பாபுவும் முருக பக்தராவார். அதனால் வேண்டுமென்றே இப்படி செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை. இந்த படத்தின் கதைப்படி முருகன் சிலை ஒரு முக்கிய கதாபாத்திரமாக இடம் பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் தான் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நாங்கள் வடிவமைத்தோம். முருகனையும் சிவனையும் கொண்டாடும் நாம் திரு விழாக்களில் முருகர் வேடமிடுகிறோம், சிவன் வேடம் அணிகிறோம். அதையே சினிமாவில் காட்டும்போது எப்படி தவறாகி விடும்? முருகனை, சிவனை கொண்டாடும் எங்களை போன்ற ஒவ்வொருவருக்கும் உண்டான தனிப்பட்ட உரிமையாகத்தான் இதை பார்க்கிறோம். இந்த படத்திற்கு வைத்திருக்கிற ‘காக்டெய்ல்’ தலைப்புக் கூட ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள காக்டெய்ல் கிளியை குறிப்பிடும்படியாகதான் வைத்திருக்கிறோம். அதனால் தான் இந்த போஸ்டரில் முருகனின் வாகனமான மயிலுக்கு பதிலாக அந்த காக்டெய்ல் கிளியை பயன்படுத்தியுள்ளோம். இது தவிர இப்படம் மதுவை மையப்படுத்திய கதை அமைப்பு கொண்ட படமும் இல்லை’’ என்று விளக்கம் அளித்துள்ளார் இயக்குனர் முருகன்!
இந்த படத்தின் மூலம் ஜி.வி.பிரகாஷிடம் பணிபுரிந்த் சாய் பாஸ்கர் இசை அமைப்பாளர் ஆகிறார். பி.ஜி.முத்தையாவின் சிஷ்யரான ரவீன் ஒளிப்பதிவு செய்கிறார். என்.ஃபாசில் படத்தொகுப்பு செய்கிறார். சண்டை காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைக்கிறார். இந்த படத்தின் டீஸ்ர் விரைவில் வெளியாக இருக்கிறது.
யுவராஜ் சுப்ரமணி இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா நடிக்கும் படம் ‘டாணா’. ‘நோபல் மூவீஸ்’ என்ற...
’பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு...
‘கூர்கா’ படத்தில் கதாநாயகனாக நடித்த காமெடி நடிகர் யோகி பாபு முதன் முதலாக ஒரு படத்தில் இரட்டை...