ஹாலிவுட் படத்தில் நடிக்கும் பார்த்திபன்!

தனுஷை தொடர்ந்து பார்த்திபனும் ஒரு  ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார்!

செய்திகள் 3-Feb-2020 3:41 PM IST Top 10 கருத்துக்கள்

பார்த்திபன் ஒத்த ஆளாய் இயக்கி, தயாரித்து, நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘ஒத்த செருப்பு சைஸ்-7’. வித்தியாசமான முயற்சியில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு நல்ல விமர்சங்கள், பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்கள், விருதுகள் வாங்கிய இந்த படத்தை தொடர்ந்து பார்த்திபன் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் ஒரு ஹாலிவுட் படத்திலும் பார்த்திபன் நடிக்க இருக்கிறார். எதை செய்தாலும் வித்தியாசமாக செய்து வரும் பார்த்திபன், தான் இப்போது நடித்து வரும் படங்கள் மற்றும் அடுத்து நடிக்க இருக்கும் படங்கள் குறித்த அறிவிப்பை வித்தியாசமான பாணியில் நேற்று வெளியிட்டுள்ளார். அந்த பதிவு வருமாறு…

02022020 இன்றைய தேதியின் வி(சேஷ)சேதி...

விஜய் சேதுபதியின் பாதியாக நடிக்கும் 'துக்ளக் தர்பார்',

Amazon-னின் புஷ்கர் காயத்ரி வழங்கும் 'சுழல்'என்ற Web series,

சிம்ரனின் சொந்தப்படம்,

எழில் இயக்க ராஜேஷ் குமாரின் நாவலில் நடிக்கும் படம்,

சமீப பிரபல இயக்குனரின் படம்,

மற்றும் என் 'இரவின் நிழல்'

இன்னும் சில! இவையன்றி...

Really its a great pleasure for me to announce that.....

ஏன் ஏன் Suddenly ஆங்கிலம்?

Yeah! இவ்வருட கடைசியில்

ஒரு நேரடி ஆங்கிலப் படத்தில் நடிக்கிறேனாக்கும்...( OS7 பார்த்த ஹாலிவுட் இயக்குனரின் அழைப்பில் March-ல் L A செல்கிறேன்) மற்ற விவரங்கள் Soon! இதுவே நிகில்-முருகன் அருள் வாக்கிற்காக! மீண்டும் ஒரு செய்தி 20/02/2020-ல் போட கட்டளையிட்டிருக்கிறார்!



-ரா.பார்த்திபன்



#Parthiepan #OththaSeruppuSize7 #IravinNizhal #Suzhal #ThuglakDarbar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அயோக்யா ட்ரைலர்


;