‘ஓ மை கடவுளே’யில் சிறப்பு வேடங்களில் நடிக்கும் 2 பிரபலங்கள்!

அசோக் செல்வன் ரித்விகா சிங் நடிக்கும் ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய்சேதுபதி,  கௌதம் வாசுதேவ் மேனன்!

செய்திகள் 3-Feb-2020 3:39 PM IST Top 10 கருத்துக்கள்

அசோக் செல்வன், ரித்விகா சிங் இணைந்து நடிக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அஸ்வத் மாரிமுத்து இயக்கி உள்ளார். காதலர் தினமான ஃபிப்ரவரி 14-ஆம் தேதி ரிலீசாக இருக்கும் இந்த படத்தை அசோக் செல்வனும், அபிநயா செல்வமும் இணைந்து துவங்கியிருக்கும் ‘ஹேப்பி ஹை பிக்சர்ஸ்’ என்ற நிறுவனமும், டில்லி பாபுவின் ‘ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இன்னொரு நாயகியாக ‘தெய்வமகள்’ தொலைக்காட்சி தொடரில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வாணி போஜனும் நடிக்கிறார் என்ற தகவலை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம். இப்போது இந்த படத்தில் சிறப்பு வேடங்களில் விஜய்சேதுபதி, இயக்குனர் கௌதம் வாசுதேவன் ஆகியோர் நடித்துள்ளார்கள் என்ற அதிகாரபூர்வ தகவள் வெளியாகி உள்ளது. இதனல் இந்த படத்தின் மிது மேலும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. ‘மேயாத மான்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார். பூபதி செல்வராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். சென்சாரில் U/A சர்டிஃபிக்கெட் கிடைத்துள்ள இப்படம் வித்தியாசமான காதல் கதையாக உருவாகி உள்ளது என்று கூறப்படுகிறது!
#AshokSelvan #RitikaSingh #VaniBhojan #HappyHighPictures #AxessFilmFactory #VijaySethupathi #OhMyKadavulae #OhMyKadavulaeFromFeb14th #SakthiFilmFactory #OhMyKadavuleWithSFF #GauthamVasudevMenon

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - நீ இன்றி பாடல் வீடியோ


;