8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் மல்லிகா ஷெராவத்!

ஜீவன் நடிக்கும் பாம்பாட்டம் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்தும் நடிக்கிறார்!

செய்திகள் 3-Feb-2020 1:37 PM IST Top 10 கருத்துக்கள்

பிரபல பாலிவுட் நடிகையான மல்லிகா ஷெராவத், கமல்ஹாசனின் ‘தசாவதாரம்’, சிம்புவின் ‘ஒஸ்தி’ ஆகிய படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். 2011-ல் வெளியான ‘ஒஸ்தி’ படத்தை தொடர்ந்து எந்த தமிழ் படத்திலும் நடிக்காத மல்லிகா ஷெராவத் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அந்த படம் ஜீவன் கதாநாயகனாக நடிக்கும் ‘பாம்பாட்டம். வடிவுடையான் இயக்கி வரும் இந்த படத்தை ஓரம்போ, வாத்தியார் ஆகிய படங்களை தயாரித்த ‘வைத்தியநாதன் ஃபிலிம் கார்டன்’ என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. தொடர்ந்து ஹாரர் ரக படங்களை இயக்கி வரும் வடிவுடையான் இயக்கும் இந்த படத்தில் மல்லிகா ஷெராவத் ராணி கேரக்டரில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் ஜீவனுடன் மேலும் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள் என்றும் அவர்கள் குறித்த விவரங்களை படக்குழுவினர் விரைவில் வெளியிட இருக்கிறார்கள் என்றும் ஆந்த தகவல் தெரிவிக்கிறது.


#Jeevan #Pambattam #VaithiyanathanFilmGarden #Amresh #EnniyanJHarris #SureshUrs #PARaghavan #MallikaSherawat

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜெயிக்கிற குதிர - டிரைலர்


;