கிரிக்கெட் பிரபலம் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் படம்!

பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘பிரண்ட்ஷிப்’

செய்திகள் 3-Feb-2020 1:08 PM IST Top 10 கருத்துக்கள்

இந்திய கிரிக்கெட் வீரர்களில் பிரபலமான ஒருவர் ஹர்பஜன் சிங். தனது விளையாட்டு திறமையால் இந்தியா முழுக்க இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். அவ்வப்போது ட்விட்டரில் தமிழில் ஸ்டேட்டஸ் போட்டும் தமிழக மக்களிடம் பிரபலமான இவர், சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’ படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கிறர் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த படத்தை தொடர்ந்து ஹர்பஜன் சிங் ஒரு நேரடி தமிழ் படத்தில் ஹீரோவாகவும் நடிக்கிறார் என்ற அதிகார்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ‘அக்னி தேவி’ என்ற திரைப்படத்தை இணைந்து இயக்கிய ஜே.பி.ஆர்., ஷாம் சூர்யா இருவரும் தங்களது இரண்டாவது படமாக இயக்குகின்றனர். இந்த படத்தை ஷேண்டோ ஸ்டுடியோ மற்றும் சினிமா ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. ஒரு தமிழ் படத்தில் ஒரு கிரிக்கெட் பிரபலம் கதாநாயகனாக நடிப்பது இதுவே முதல் முறை! இந்த படத்திற்கு ‘பிரண்ட்ஷிப்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை ஹர்பஜன் சிங் நேற்று வெளியிட்டார். இந்த படத்தில் ஹர்பஜன் சிங்குடன் நடிக்கும் இதர நடிகர்கள், நடிகைகள் மற்றும் இப்படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படம் கோடை விடுமுறையில் வெளியாக இருக்கிறது என்ற தகவலையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

#HarbhajanSingh #Friendship #Dikkiloona #JohnPaulRaj #ShamSuriya #JPR #AgniDevi #JohnPaulRaj #ShamSurya #SeantoaStudios #Stalin #CinemaasStudio #FirstTimeInCinemaACricketLegendPlaysMainLead

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;