மீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி!

தர்பார் படத்தை தொடர்ந்து ‘தலைவர்-168’ படத்திலும் நடிக்கிறார் நயன்தாரா!

செய்திகள் 1-Feb-2020 4:52 PM IST Top 10 கருத்துக்கள்

‘தர்பார்’ படத்தை தொடர்ந்து ரஜினி ‘சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ‘தலைவர்-168’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வரும் நிலையில் இப்படத்தில் நயன்தாராவும் நடிக்க இருக்கிறார் என்ற அதிகாரபூர்வ தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ‘சிறுத்தை’ சிவா இயக்கிய ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் ஜோடியாக நடித்த நயன்தாரா சமீபத்தில் வெளியான ‘தர்பார்’ படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார். இந்நிலையில் ரஜினியின் அடுத்த படமான ‘தலைவர்-168’ படத்திலும் நயன்தாரா இணைந்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘சிறுத்தை’ சிவாவும் ரஜினிகாந்தும் முதன் முதலாக இணைந்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிரார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் மேலும் பல புதிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#Thalaivar168 #Thalaivar168Pooja #SiruthaiSiva #Superstar #SunPictures #Petta #Darbar #Viswasam #Soori #KeerthySuresh #Thalaivar #DImman #Meena #PrakashRaj #GeorgeMariyan #Khusbu #Nayanthara #LadySuperstar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாஃபியா - டீஸர்


;