உற்றான் – விமர்சனம்

காதலுக்காக போராடும் இளைஞனின் கதை!

விமர்சனம் 1-Feb-2020 1:24 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Raja Gajini
Production: Sat Cinemas
Cast: Roshan Udhayakumar, Hiroshini Komali, ‘Veyil’ Priyanka
Music: N.R.Ragunanthan
Cinematography: Holic Prabhu
Editor: S.P.Ahamed

அறிமுகம் ராஜா கஜினி எழுதி இயக்க, அறிமுகங்கள் ரோஷன் உதயகுமார், ஹிரோஷினி கோமாலி கதாநாயகன், கதாநாயகியாக நடித்து வெளியாகியுள்ள ‘உற்றான்’ எப்படி?

கதைக்களம்

ரோஷன் உதயகுமாரும், கனா சுதாகரும் ஒரே கல்லூரியில் படித்து வருகிறார்கள். கானா சுதாகரின் அக்கா ‘வெயில்’ பிரியங்கா தம்பி கானா சுதாகரையும், ரோஷனையும் மகன்களைபோல் வளர்க்கிறார். இந்நிலையில் கல்லூரி தேர்தல் வருகிறது. அதில் ரோஷன்உதயகுமார் வெற்றி பெறுகிறார். இதனால் எதிர் அணியினரின் கோபத்துக்கு ஆளாகிறார் ரோஷன். இந்நிலையில் பெண்கள் கல்லூரியில் கட்டிட வேலைகள் நடந்து வருவதால் அந்த கல்லூரி மாணவிகள் ரோஷன் படிக்கும் கல்லூரியில் படிக்க வருகிறார்கள். அப்போது அங்கு படிக்க வரும் போலீஸ் அதிகாரி மதுசூதனன் மகள் ஹிரோஷினி கோமாலிக்கும், ரோஷனுக்கும் இடையில் காதல் மலர்கிறது! இந்த காதலுக்கு மதுசூதனன் எதிர்ப்பாக இருக்கிறார். ஏற்கெனவெ ஒரு பிரச்சனையில் ஊர் பெரியவர் வேலா ராமமூர்த்திக்கும் ரோஷனுக்கும் இடையில் பகை இருந்து வரும் நிலையில், வேலா ராமமூர்த்தியும், முதுசூதனனும் இணைந்து ரோஷனை போட்டுத்தள்ள முயற்சிக்கிறார்கள்! இதிலிருந்து ரோஷன் தப்பிகிறாரா? ஹிரோஷினி கோமாலியை கரம் பிடிக்கிறாரா என்பது கிளைமேக்ஸ்.

படம் பற்றிய அலசல்

கல்லூரி பின்னணியில் நடக்கும் காதல் கதை! அதை ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம், அடிதடி என்று எடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜா கஜினி! ஆனால் திரைக்கதை அமைப்பில் நேர்த்தியில்லை. படத்தின் முதல் பாதி முழுக்க கல்லுரியில் நடக்கும் கலாட்டாக்களை மையப்படுத்தியே கதை நகருவதால் போரடிக்கிறது. இடை வேளைக்கு பிறகு மதுசூதனன், வேலா ராமமூர்த்தி ஆகியோர் ரோஷனை தீர்த்துகட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொளவதிலிருந்து கதை வேகம் பிடித்து நிறைய செண்டிமெண்ட் காட்சிகளுடன் எதிர்பாராத ஒரு கிளைமேக்ஸ் என்று படம் முடிவடைகிறது!

‘வெயில்’ பிரியங்கா, ரோஷன் சம்பந்தப்பட்ட ப்ளாஷ் பேக் காட்சிகள் கவனத்தை ஈர்த்தாலும் ‘தனது பால் குடித்து வளர்ந்தவன் ரோஷன்’ என்று பிரியங்கா குறிப்பிடும் காட்சியில் லாஜிக் இல்லை! முதல் பாதியின் அதிகபடியான நீளம், தேவையில்லாதது மாதிரி வரும் சில கேரக்டர்கள் இவைகளை தவிர்த்து திரைக்கதையில் ஒரு சில புதிய விஷயங்களை தந்து இயக்கியிருந்தால் ‘உற்றான்’ மேலும் ரசிக்க கூடிய ஒரு கல்லூரி காதல் படமாக அமைந்திருக்கும்! ரகுநந்தனின் பின்னணி இசை காட்சிகளுக்கு ஜீவனாக அமைந்துள்ளது. ஹாலிக் பிரபுவின் ஒளிப்பதிவு சம்பவங்களை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை தருகிறது. படத்தை விறுவிறுப்பாக்குவதில் படத்தொகுப்பாளர் எஸ்.பி.அஹமத் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் அது ‘உற்றா’னுக்கு பலம் சேர்த்திருக்கும்!

நடிகர்களின் பங்களிப்பு

கதையின் நாயகனாக அறிமுகமாகி இருக்கும் ரோஷன் உதயகுமார் டான்ஸ், சண்டை, காதல் என்று இளம் நாயகனுக்குரிய எல்லா அம்சங்களையும் சிறப்பாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். அதைப் போல கதாநாயகியாக வரும் ஹிரோஷினி கோமாலிக்கு வாய்பு குறைவு என்றாலும் நடிப்பில் புதுமுகமாக தெரியவில்லை. ரோஷனை வளர்க்கும் பெண்ணாக வரும் ‘வெயில்’ பிரியங்கா, போலீஸ் அதிகாரியாக வரும் மதுசூதனன், ஊர் பெரியவராக, அரசியல் செல்வாக்கு பெற்றவராக வரும் வேலா ராமமூர்த்தி, ரோஷனுக்கு உதவுபராக இன்னொரு வில்லனை போன்ற கேரக்டரில் நடித்திருக்கும் ரவிசங்கர், ரோஷனின் நண்பராக வரும் கானா சுதாகர், மற்றும் மதுமிதா, இமான் அண்ணாச்சி, சுலக்‌ஷணா என்று எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

பலம்

1.இரண்டாம் பாதி

2.இசை, ஒளிப்பதிவு

பலவீனம்

1.முதல் பாதி

2.எந்த புதிய விஷயங்களும் இல்லாதது

மொத்தத்தில்…

படத்தில் எந்த புதிய விஷயங்கள் இல்லை என்றாலும் கல்லூரி பின்னணியில் சொல்லப்பட்டுள்ள இந்த காதல் கதை, இளைஞர்களை கவர வாய்ப்பிருக்கிறது!

ஒருவரி பஞ்ச் : காதலுக்காக போராடும் இளைஞனின் கதை!

ரேட்டிங் : 3.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

;