தனுஷ் படத்தில் இணைந்த ‘96’ பிரபலம்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘கர்ணன்’ படத்தில் இணைந்த கௌரி கிஷன்

செய்திகள் 31-Jan-2020 1:56 PM IST Top 10 கருத்துக்கள்

‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் தனது இரண்டாவது படமாக இப்போது இயக்கி வரும் படம் ‘கர்ணன்’. கலைப்புலி எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாகவும், ரஜீஷா விஜயன் கதாநாயகியாகவும் நடிக்க, இவர்களுடன் மலையாள நடிகர் லால், யோகி பாபு, லட்சுமி பிரியா உட்பட பலர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு திருநெலவேலியில் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க கௌரி கிஷனும் ஒப்பந்த மாகியுள்ளார். ‘96’ படத்தில் சின்ன ஜானுவாக நடித்து ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்த கௌரி கிஷன் இது குறித்த தகவலை இயக்குனர் மாரி செல்வராஜுடன் இருக்கும் ஒரு புகைப்படத்துடன் வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளார். கிராமத்துப் பின்னணியில் உருவாகி வரும் இந்த படத்தின் ஒளிப்பதிவை நடராஜன் செய்து வர, சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

#Dhanush #Dhanush41 #PariyerumPerumal #MariSelvaraj #SanthoshNarayanan #KalaipuliSThanu #VCreations #Karnan #Lal #RajishaVijayan #LakshmiPriyaaChandramouli #GouriGKishan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;