வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ ஆகிய படங்களை இயக்கிய அஹமத், ‘ஜெயம்’ ரவியை வைத்து ஒரு படத்தை இயக்கிறார் என்றும் இந்த படத்திற்கு ‘ஜன கண மனா‘ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்றும் தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்ததுடன் இப்படத்தில் டாப்சி கதையின் நாயகியாக நடிக்கிறார் என்ற தகவலையும் பதிவு செய்திருந்தோம். இப்படம் குறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிடாமல் சத்தமில்லாமல் விறுவிறுப்பாக படப்பிடிப்பு வேலைகளை நடத்தி வந்தனர். இந்நிலையில் இப்போது இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்தது என்ற தகவலை மட்டும் இயக்குனர் அஹமத் வெளியிட்டுள்ளார். இந்த படம் ஸ்பை த்ரில்லர் ரக கதை என்றும் இந்த படத்தில் டாப்சி ஒரு இண்டலிஜெண்ட் ஏஜென்டாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இடம் பெறும் பட இது என்றும் கூறப்படுகிறாது. இந்த படத்தின் படப்பிடிப்பு அசர்பைஜான், ஃபின்லாந்த் உட்பட பல வெளிநாடுகளிலும் நடந்துள்ளது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘கோமாளி’ படத்தை தொடர்ந்து ‘ஜெயம்’ ரவி நடிப்பில் உருவாகி மற்றொரு படம் ‘பூமி’. இந்த படம் தவிர மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் நடிக்கிறார் ஜெயம் ரவி.
#JayamRavi #TaapseePannu #Ahmed #EndrendrumPunnagai #Vaamanan #Manithan #JanaGanaMana #Arjun #ElnaazNorouzi #JanaGanaManaShootingScheduleWrapUp
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில்...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி...