‘சூரரை போற்று’வின் அடுத்த அசத்தல் அப்டேட்!

சூர்யாவின் ‘சூரரை போற்று’ படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு!

செய்திகள் 31-Jan-2020 12:13 PM IST Top 10 கருத்துக்கள்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரை போற்று’ படத்தின் புதிய புதிய தகவல்கள் அடிக்கடி வெளியாகிய வண்ணம் உள்ளன. சூர்யாவின் 38-ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்தின் டீஸர், சிங்கிள் டிராக் முதலானவை சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளன. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார் இப்படத்திற்கு இசை அமைக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார். அவர் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளதில், ‘‘ பாடலாசிரியர் விவேக் எழுதிய ‘வெய்யோன் சில்லி….’ என்ற பாடலை பாடகர் ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் பாடியிருப்பதாகவும், இப்பாடலின் ரிலீஸ் தேதி மற்றும் நேரத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிடும்’’ என்றும் தெரிவித்துள்ளார். சூர்யாவின் ‘2D ENTERTAINMENT’ நிறுவனமும் ‘Sikhya Entertainment’ என்ற நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் ‘சூரரைப் போற்று’படத்தில் சூர்யாவுடன் அபர்ணா முரளி, மோகன் பாபு, கருணாஸ், ஊர்வசி, காளிவெங்கட் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#SooraraiPottru #Suriya #Suriya38 #GVPrakashKumar #Aparnabalamurali #SudhaKongara #MohanBabu #MaaraTheme #SparkPictures #Veyyonsilli #SecondSingleFromSooraraiPottru

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;