சிபி ராஜின் ‘வால்டர்’ படத்தில் இணைந்த 2 ‘வால்டர்’ பிரபலஙக்ள்!

சிபி ராஜ் நடிக்கும் வால்டர் படத்தின் ஆடியோவை பிரபல போலீஸ் அதிகாரி வால்டர் தேவாராம் வெளியிட இயக்குனர் பி.வாசு பெற்றுக் கொள்கிறார்.

செய்திகள் 30-Jan-2020 12:41 PM IST Top 10 கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் அன்பரசன் இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் படம் ‘வால்டர்’. அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் சிபிராஜ் போலீஸ் அதிகாரியாக நடிக்க, சிபிராஜுடன் சமுத்திரக்கனி, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் கதாநாயகியாக நடித்த ஷிரின் கஞ்ச்வாலா, ஷனம் ஷெட்டி, ரித்விகா ஆகியோரும் நடிக்கிறார்கள். சமீபத்தில் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்த இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளும் இப்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ இன்று மாலை வெளியாக இருக்கிற்து. இதற்கான விழாவில் ‘வால்டர்’ படத்தின் ஆடியோவை, தமிழகத்தில் பல ஆண்டு காலம் போலீஸ் அதிகாரியாக சிறப்பாக பணியாற்றிய ‘வால்டர்’ தேவாராம் வெளியிட, சத்யராஜ் நடிப்பில் ‘வால்டர் வெற்றிவேல்’ படத்தை இயக்கிய பி.வாசு பெற்றுக்கொள்ள இருக்கிறார். சிபிராஜின் ‘வால்டர்’ படத்தில் இந்த இரண்டு ‘வால்டர்’ பிரபலங்கள் இணைந்திருப்பது இப்படம் மீது மேலும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ‘11.11 புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் டாக்டர் பிரபு திலக், திருமதி ஸ்ருதி திலக் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்ய, தர்மபிரகாஷ் இசை அமைக்கிறார். மிக மிக விரைவில் ரிலீசாக இருக்கிறது ‘வால்டர்’.

#Sibiraj #Samuthirakani #ShirinKanchwala #11:11 Productions #Anbu #GauthamVasudevMenon

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;