ஏற்கெனவே ராஞ்சனா, ஷமிதாப் ஆகிய ஹிந்தி படங்களில் நடித்த தனுஷ் மீண்டும் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தனுஷை பாலிவுட்டில் அறிமுகப்படுத்தி ‘ராஞ்சனா’ படத்தை இயக்கிய ஆநந்த் எல்.ராயே இப்படத்தையும் இயக்க, இந்த படத்திற்கு ‘அத்ரங்கி ரே’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தை அக்ஷய்குமாரின் cape of good films நிறுவனம் தயாரிக்க, இந்த படத்தில் அக்ஷய்குமாரும் சாரா அலிகானும் நடிக்கிறார்கள். இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக அக்ஷய்குமார், தனுஷ், சாரா அலிகான் மூவரும் இணைந்திருப்பது மாதிரியான ஒரு புகைப்படமும் வெளியாகி உள்ளது. ‘ராஞ்சனா’ படத்திற்கு இசை அமைத்த ஏ.ஆர்.ரஹ்மானே இப்படத்திற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மார்ச் 1-ஆம் தேதி துவங்க இருக்கிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘D-40’ படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் தனுஷ் இப்போது ‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது திருநெல்வேலியில் நடந்து வருகிறது.
#AkshayKumar #Dhanush #AanandLRai #SaraAliKhan
சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா கதையின் நாயகனாக நடித்த படம் ‘கழுகு’. இந்த அடம் வெற்றி பெற்றதை...
‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘கர்ணன்’....
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள...