‘D-40’ குறித்து தயாரிப்பாளர் சசிகாந்த் தந்த அப்டேட்!

சசிகாந்தின் ‘Y NOT STUDIOS’ நிறுவனம் துவங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்தது!

செய்திகள் 30-Jan-2020 11:31 AM IST Top 10 கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் தரமான படைப்புகளை தயாரித்து வழங்கும் நிறுவனங்களில் ஒன்று சசிகாந்தின் ‘Y NOT STUDIOS. தமிழ் படம், காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், இருதிச்சுற்று, விக்ரம் வேதா உள்ளிட்ட படஙக்ளை தயாரித்து வழங்கிய இந்நிறுவனம் இபோது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘D40’, யோகி பாபு நடிப்பில் ‘மண்டேலா’ உள்ளிட்ட படங்க்ளை தயாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனம் துவங்கி நேற்றுடன் 10 ஆண்டுகள் நிறைடடைந்ததை முன்னிட்டு இந்நிறுவனர் சசிகாந்த் வெளியிட்டுள்ள பதிவில்,

‘‘இந்த பத்தாவது வருட நிறைவில் எங்கள் நிறுவனத்திற்கு ஆத்ரவு தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் சினிமாவில் எங்கள் நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வருடம் எங்கள் தயாரிப்புகளாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம், மண்டேலா, ஏலே ஆகிய படங்கள் வெளியாகும்’’ என்று தெரிவித்துள்ள சசிகாந்த், தனது நிறுவனம் தயாரித்த படங்களின் கதாபாத்திரங்கள் மத்தியில் தனுஷ் ஒரு அருவாளுடன் நிற்பது மாதிரியான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் ‘D40’ Loading m என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை வைத்து பாரக்கும்போது ‘D40’ யின் டைட்டிலுடன் கூடிய போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று ஏதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு ‘சுருளி’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது அதிகாரபூர்வமான தகவல் இல்லை!

#KarthikSubbaraj #Dhanush #AishwaryaLekshmi #YNOTStudios #Sashikanth #SanthoshNarayanan #ShreyaasKrishna #VivekHarshan #DineshSubbarayan #DhanushKarthikSubbarajMovie #D40

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;