அடர்ந்த காட்டுக்குள் சாகச பயணம் மேற்கொண்ட ரஜினிகாந்த்!

டிஸ்கவரி சேனலுக்காக அடர்ந்த காட்டுப் பகுதிக்கு சென்று சாகஸம் செய்த ரஜினிகாந்த்!

செய்திகள் 29-Jan-2020 5:25 PM IST VRC கருத்துக்கள்

நடிகர் ரஜினிகாந்த் உலகப் புகழ்பெற்ற டிஸ்கவரி சேனலின் பியர் க்ரில்ஸுடன் சேர்ந்து ‘MAN VS WILD என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்து. இதனை தொடர்ந்து இதன் ஒரு நாள் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்துடன் பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமாரும் கலந்து கொண்டார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் பாரத பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நரேந்திர மோடியை தொடர்ந்து இப்போது ரஜினிகாஃந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருப்பதால் இந்நிகழ்ச்சி மீது மேலும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. டிஸ்கவரி சேன்லில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உண்டு. தமிழில் டப்பிங் செய்யப்பட்டும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகுவதால் தமிழகத்திலும் இந்நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். மனிதர்கள் வாழ முடியாத அடர்ந்த காட்டுப் பகுதிக்கு சென்று சாகசங்கங் நிகழ்த்தும் நிகழ்ச்சி இது! இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பதிப்பூர் காட்டு பகுதியில் நடைபெற்றது. இந்த காட்டுப் பகுதிக்கு சென்ற ரஜினிகாந்த் இதன் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தார். இந்த படப்பிடிப்பை முடித்து நேற்று சென்னை திரும்பிய ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் இந்த படப்பிடிப்பில் எனக்கு காயம் ஏற்பட்டது என்று வெளியாகியுள்ள தகவலில் சிறிதும் உண்மை இல்லை என்றும் இந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டது மாறுபட்ட அனுபவமாக இருந்தது என்றும் கூறி உள்ளார்.

#Rajinikanth #RajinikanthInManVsWild #ManVsWild #BearGrylls #Discovery #AkshayKumar #Modi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;