செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி, ரித்திகா சிங், நந்திதா, சிம்ரன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘வணங்காமுடி’. ‘மேஜிக் பாக்ஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்ற 2017-ஆம் ஆண்டு துவங்கி சில நாட்கள் நடைபெற்றது. அதன் பிறகு ஒரு சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தடைப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது மீண்டும் கொடைக்கானலில் துவங்கியுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இங்கு சில நாட்கள் இப்படத்தில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது என்றும் அத்துடன் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடையும் என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது. தலைவாசல், அமராவதி, கர்ணா, நான் அவனில்லை உட்பட பல படங்களை இயக்கிய செல்வா இயக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். கோகுல் ஒளிப்பதிவு செய்கிறார்.
#ArvindSwamy #Simran #RitikaSingh #NanditaSwetha #Vanangamudi #Selva #MRGanesh #MagicBoxProductions #DImman
அசோக் செல்வன், ரித்விகா சிங் இணைந்து நடிக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி...
அசோக் செல்வன், ரித்விகா சிங் இணைந்து நடிக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம்...
யுவராஜ் சுப்ரமணி இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா நடிக்கும் படம் ‘டாணா’. ‘நோபல் மூவீஸ்’ என்ற...