சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெமோ, சீமராஜா முதலான படங்களை தயாரித்த நிறுவனம் ஆர்.டி.ராஜாவின் ‘ 24 AM STUDIOS’. இந்த நிறுவனம் ‘நேற்று இன்று நாளை’ படத்தை இயக்கிய ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஒரு படத்தை தயாரிக்கிறது என்ற தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் சில நாட்கள் நடைபெற்றது. ஆனால் அதன் பிறகு பல்வேறு காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தடைப்பட்டது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் எங்கவீட்டு பிள்ளை, ஹீரோ ஆகிய படங்களில் நடிக்க, அப்படங்கள் வெளியாகியும் விட்டது. இந்நிலையில் ஆர்.ரவிக்குமார் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மீண்டும் துவங்கியுள்ளது என்ற தகவலை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சயின் ஃபிக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் கதையின் நாயகனாக நடிக்க, ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். படப்பிடிப்பு துவங்கிய தகவலை வெளியிட்டுள்ள படக்குழுவினர் இப்படத்தின் டைட்டிலை விரைவில் அறிவிக்க உள்ளது என்ற தகவலையும் பகிர்ந்துள்ளனர். இந்த படம் தவிர சிவகார்த்திகேயன் இப்போது நடித்து வரும் மற்றொரு படம் ‘டாக்டர்’. நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் இந்த படத்தை சிவகார்த்திகேயனின் ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனமும், கே.ஜே.ஆர்.ஸ்டியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
#24AMStudios #RDRaja #SivaKarthikeyan #RakulPreetSingh #Doctor #NetruIndruNaalai #RRavikumar #Doctor #NelsonDhilipKumar #CoCo #KolamaavuKokila
ஆர்.டி.ராஜாவின் ‘ 24 AM STUDIOS’ நிறுவனமும், கோட்டபடி ராஜேஷின் கே.ஜே.ஆர்.ஸ்டூடியோஸ் நிறுவனமும்...
ரெமோ, சீமராஜா ஆகிய படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர்.டி.ராஜாவின் ‘ 24 AM STUDIOS’...
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ ஹீரோ’. இந்த படம் தயாரிப்பில் இருந்து வந்த...